என்மேலுள்ள நின் சர்வ
நன்மைகட்காக நான்
என்ன செய்வேன் உமக்கென்
இயேசுபரா? இப்போ
நன்றியால் எந்தன் உள்ளம்
பொங்கி வழியுதே
இன்று வரையுமென்னைக்
காத்ததாலே - தேவா
பாவத்தினின்று எந்தன்
ஆவி உயிர்ப்பிக்க
சாபசிட்சை சகித்த
தேவ சுதா - மகா
என்னை அனுதினம்
அன்போடு நடத்திடும்
பொன்னேசுவே ஆனந்த
ஸ்தோத்திரமே - எந்தன்
முற்றும் முடிய என்னைக்
காத்து நடத்திடச்
சத்துவமீந்திடும் நல்
நண்பர் நீரே - திருச்
தாதன் வலப்புறத்தில்
நாதன் நீர் ஏழைக்காய்
பாதம் வேண்டியே நிற்கும்
பாக்கியனே - பொன்னின்
குற்றம் குறைகளின்றிக்
கோதில்லா ஜோதியில்
முற்றும் என்னை நிறுத்த
வல்லவனே - தேவா
இந்நிலம் தன்னிலேழைத்
தங்கிடும் நாளெல்லாம்
ஏத்துவேனே உம் திரு
நாமமதை - ஏழை